திருகோணமலை எண்ணெய் குதங்களை நிர்வகிப்பதற்கு புதிய நிறுவனம் ஸ்தாபிப்பு – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல்!

Wednesday, December 29th, 2021

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ரிங்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (Trinco Petroleum Terminal Ltd) என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

IOC நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள எண்ணெய் குதங்களிலிருந்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் பங்கினை நிர்வகிப்பதற்காக குறித்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த எண்ணெய் குதங்களின் ஒரு பகுதியை மீண்டும் அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்..

இதேவேளை IOC நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள திருகோணமலையின் 99 எண்ணெய் குதங்களின் பெரும் பகுதியை மீண்டும் பெற்றுக் கொள்வது குறித்த கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரச சொத்தான ரிங்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (Trinco Petroleum Terminal Ltd) நிறுவனத்தின் கீழ் செயற்படும் எண்ணெய் குதங்கள் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுச்சேர்ப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகள் அடுத்த மாதத்திற்குள் நிறைவடையும் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: