திரவ நனோ நைட்ரஜன் உர இறக்குமதியில் மோசடியும்ட இடம்பெறவில்லை – அரசாங்கம் திட்டவட்டம்!

Tuesday, October 26th, 2021

எதிர்வரும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் பொருட்களின் விலைகள் தொடர்பில் சாதகமான சூழ்நிலையை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலகச் சந்தையில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமை இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றும் எந்த அரசங்கமும் தனது ஆட்சிக் காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்வதை விரும்பாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளானமை தொடர்பாக நாங்கள் வருந்துகின்றோம் என்றும் அவர் தெரிவித் துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அத்தோடு உலகச் சந்தையில் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன என்றும் எதிர்வரும் மாதங்களில் பொருட்களின் விலைகள் குறைவடையும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

திரவ நனோ நைட்ரஜன் உரத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

உர இறக்குமதியில் பாரிய பண மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்ற நிலையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை தெரிவித்துள்ளார்..

மேலும் இறக்குமதி செய்யப்பட்ட உரத்தின் விலை உள்ளிட்ட விடயங்கள் குறித்த உண்மை நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என அவர் மேலும் கூறினார்.

நைட்ரஜன் உரத்தினை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும், அதன் தரம் தொடர்பாக ஏற்பட்ட சிக்கலால் அந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டுள்ளார்.

இதனால் விவசாயிகள் எதிர்கொண்ட நெருக்கடிகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே திரவ நனோ நைட்ரஜன் உரத்தினை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: