தினேஸ் ஷாப்டரின் மரணம் ஒரு குற்றச்செயல் – சந்தேகநபர்களை கைதுசெய்து உடனடியாக நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு சிஐடி பணிப்பாளருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, November 1st, 2023

தினேஸ் ஷாப்டரின் மரணம் ஒரு குற்றச்செயல் எனக் கருதி இந்த வழக்கின் சந்தேகநபர்களை கைதுசெய்து உடனடியாக நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு சிஐடி பணிப்பாளருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிடடுள்ளது.

கழுத்துப் பகுதி மற்றும் முகத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே தினேஸ் ஷாப்டரின் மரணம் இடம்பெற்றுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரிகளின் அறிக்கை மற்றும் ஐந்து பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டன் அடிப்படையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கையின் பிரபல வர்த்தகராக கருதப்படும் தினேஸ் ஷாப்டர் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் பொரளை பொதுமயானத்தில் கார் ஒன்றில் இருந்து குற்றுயிராய் மீட்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஹோட்டல்களில் திருமண வைபவங்களை நடத்த இன்றுமுதல் அனுமதி - சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்ச...
சேதன பசளை உற்பத்திச் செயல்முறை தொடர்பில் மீளாய்வு - இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவிப்பு!
அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிடும்போது மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு அறிவிக்க வேண்டும...