தினமும் 3 லீட்டருக்கு அதிகமாக நீர் அருந்துங்கள் – யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் யமுனாநந்தா வலியுறுத்து!

Monday, April 17th, 2023

தினமும் மூன்று லீட்டருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடுமையான வெப்பமான கால நிலை நிலவி வருவதனால், உடலில் உள்ள நீர் சத்துக்கள் இழக்கப்படும்.

அதனால் சூரியன் உச்சம் கொடுக்கும் மதிய நேரங்களில் வெளி பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

தினமும் 3 லீட்டர் வரையில் நீர் அருந்துங்கள். அத்துடன், போதியளவு நீராகாரங்கள் அருந்துங்கள்.   நீர் தன்மையுள்ள வெள்ளரி பழம் போன்றவற்றை உண்ணுங்கள்.“ எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பருத்தித்துறை சாலையின் 751 வழி பேருந்து சேவை இலாபத்தை இலக்காக கொண்டு செயற்படாது மக்களின் நலன்களிலும்...
2000 ரூபா கொடுப்பனவு இதுவரை கிடைக்காதவர்களுக்கு சில தினங்களில் வழங்க நடவடிக்கை - உள்நாட்டலுவல்கள் இர...
முகநூல் ஊடாக ஏற்பாடான களியாட்ட நிகழ்வு : போதைப்பொருட்களுடன் பெண்கள் உட்பட பலர் கைது - சிரேஷ்ட பொலிஸ்...