திட்டமிட்டபடி யாழ் – கிளிநொச்சி புகையிரத சேவை நபளைமுதல் இடம்பெறும் – வெளியானது நேர அட்டவணை!

Sunday, July 10th, 2022

திட்டமிட்டபடி காங்கேசன்துறையில் இருந்து கிளிநொச்சிக்கான விசேட ரயில் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை 11.07.2022 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் இடையே எதிர்வரு் 11 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கவிருக்கும் விசேட புகையிரதசேவைக்கான நேரடி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, காலை 6 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் இந்தப் புகையிரதம், 6.40 க்கு யாழ் புகையிரத நிலையத்திலிருந்தும், 7 மணிக்கு சாவகச்சேரியிலிருந்தும், 7.12 க்கு கொடிகாமத்திலிருந்தும் புறப்பட்டு பளையை 7.30 க்கும், கிளிநொச்சியை 7.56 க்கும், அறிவியல்நகர் புகையிரத நிலையத்தை 8.05க்கும் வந்தடைந்து 8.11 க்கு முறிகண்டியை அடையும்.

இதேவேளை காங்கேசன்துறைக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையில், மாவிட்டபுரத்திலிருந்து 6.05 க்கும், தெல்லிப்பளையிலிருந்து 6.09 க்கும், மல்லாகத்திலிருந்து 6.14 க்கும், சுன்னாகத்திலிருந்து 6.18, இணுவிலிருந்து 6.22 க்கும், கோண்டாவிலிருந்து 6.27 க்கும், கொக்குவிலிருந்து 6.31 க்கும் புறப்பட்டு 6.35க்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும்.

யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் இடையே, புங்கன்குளம் 6.44, நாவற்குழி 6.50, தனங்கிளப்பு 6.54, சாவகச்சேரி 7.00, சங்கத்தானை 7.03, மீசாலை 7.07, கொடிகாமம் 7.12, மிருசுவில் 7.14, எழுதுமட்டுவாள் 7.21க்கு புறப்பட்டு பளையை 7.30க்கு வந்தடையும். அங்கிருந்து ஆனையிறவு 7.42, பரந்தன் 7.50 க்கு வந்தடைந்து கிளிநொச்சிக்கு 7.56 க்கு வந்தடையும்.

மீண்டும், காலை 10 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் இந்தப் புகையிரதம் பளையிலிருந்து 10.31 க்கும், கொடிகாமத்திலிருந்து 10.48க்கும், சாவகச்சேரியிலிருந்து 11 மணிக்கும் புறப்பட்டு 11.20க்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.

பிற்பகல் 2 மணிக்கு மறுபடியும் காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் இந்தப் புகையிரதம், யாழ்ப்பாணத்திலிருந்து 2.39 க்கும், சாவகச்சேரியிலிருந்து 2.59 க்கும், கொடிகாமத்திலிருந்து 3.11 க்கும் புறப்பட்டு, பளையை 3.38க்கும், கிளிநொச்சியை 3.56க்கும் வந்தடைந்து, முறிகண்டியை 4.10க்கு வந்தடையும்.

மீண்டும் முறிகண்டியிலிருந்து 4.40க்கு புறப்படும் இந்தப் புகையிரதம் அறிவியல்நகரை 4.46 க்கு வந்தடைந்து, கிளிநொச்சியிலிருந்து 5 மணிக்கு புறப்பட்டு, பரந்தனிலிருந்து 5.06 க்கும், பளையிலிருந்து 5.30 க்கும் புறப்பட்டு 6.44 க்கு யாழ்ப்பாணம் வந்தடைந்து 7.20 க்கு காங்கேசனை அடையும்.  இடையில், பரந்தனிலிருந்து 5.04 க்கும், ஆனையிறவிலிருந்து 5.14 க்கும் புகையிரதம் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: