திங்களன்று வைத்தியர்கள் முழுநேர பணிப்புறக்கணிப்பு – GMOA
Sunday, May 21st, 2017
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் எதிர்வரும் 22ம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த அரை நாள் பணிப்புறக்கணிப்பு ஒரு நாள் பணிப்புறக்கணிப்பாக அதிகரிப்பதற்கான அதிகாரத்தை அந்த சங்கத்தால் தமது கிளைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 19 இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அனைத்து பல்கலைக்கழக மணவர் ஒன்றியத்தின் சைட்டம் எதிர்ப்பு பேரணியின் மீது காவற்துறை கண்ணீர்ப் புகை தாக்குதல் மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் திங்கட் கிழமை, அரை நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் இதற்கு முன்னர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தகுதிகாண் வைத்திய நிபுணர்கள் தொழிற்சங்க போராட்டம்
தேர்தல் கடமைக்கு சமூகமளிக்காத அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சடிக்கும் பணி விரைவில் ஆரம்பம் - மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவ...
|
|
|


