தாய்லாந்து அருகே காற்றழுத்த தாழ்வு நிலை – தமிழகத்தை நோக்கி நகர்வு!

தாய்லாந்து அருகே, உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழகத்தை நோக்கி, மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.இன்று, தமிழக கடலோர பகுதிக்குள் பிரவேசிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம்; தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில், இன்று ஓரளவு மழையும், நாளை முதல் இரு தினங்களுக்கு, மாநிலம் முழுவதும் அனேக இடங்களில் கடும் மழை பெய்யும. மணிக்கு, 45 முதல், 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். அதனால், கடலுக்குள் செல்லும் மீனவர்கள், எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக செயல்பட வேண்டும என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
3 நாள் பயணமாக பிரதமர் சீனா பயணம்!
முடிவுக்கு வந்தது வடமாகாணத் தொண்டராசிரியர்களின் போராட்டம்!
நஞ்சற்ற விவசாய முயற்சியில் யாழ். பல்கலைக்கழக பட்டதாரிகள்!
|
|