தாமரை கோபுரத்தின் முதல் 3 நாள் வருமானம் 75 இலட்சம் ரூபாவாக பதிவு – தாமரைக் கோபுரம் தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி தெரிவிப்பு!
Monday, September 19th, 2022தாமரை கோபுரம் கடந்த 15 ஆம் திகதிமுதல் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம், முதல் 3 நாட்களில் 75 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காலப்பகுதியில் சுமார் 14,000 பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக கொழும்பு, தாமரைக் கோபுரம் தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசமும் சனிக்கிழமை (17) முதல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதியம் 12.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை பார்வையிடலாம்.
எவ்வாறாயினும், இரவு 10:00 மணி வரை மட்டுமே அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
எச்சரிக்கை... வெள்ளத்தில் விளையாடிய இரு சிறுவர்கள் பலி: வத்தளையில் சோகம்!
தனியார் மின் நிலையங்களிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனை – உடன் நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ...
|
|
|


