தாபரிப்புப் பணம் செலுத்தாத நபருக்கு 38 மாதங்கள் சிறை!

38 மாதங்கள் தாபரிப்புப் பணம் செலுத்தாத நபருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 38 மாதங்கள் சிறைத்தண்டனை நேற்று விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
மனைவியால் தொடுக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக சாவகச்சேரி நீதிமன்றால் குறிப்பிட்ட பணம் மாதாந்தம் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.
குறித்த தொகையினை சிறிது காலம் நீதிமன்றில் செலுத்தி வந்த நபர் கடந்த 38 மாதங்களாக செலுத்தாமல் விட்டுவிட்டார்.
இது தொடர்பாக மனைவி நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து 38 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்குமாறு உத்தரவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
கடுமையாக போராடி வருகின்றோம் – வைத்தியர்கள்!
நாட்டின் முன் எத்தகையச் சவால்கள் இருந்தாலும், கைவிட முடியாத பல தேசிய பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன -...
பறிக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – மே நாளில் யாழ் நகரின் முன்னா...
|
|