தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழுவில் பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் முன்னிலை!

Tuesday, June 4th, 2019

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் இன்று(04) பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் முன்னிலையாகவுள்ளனர்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக டி சில்வா ஆகியோர் இன்று(04) தெரிவுக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று இடம்பெறவுள்ள தெரிவுக்குழுவின் விசாரணைகளில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 29ஆம் திகதி கூடிய இந்த தெரிவுக்குழு விசாரணைகள் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் ஆகியோர் அன்றைய தினம் சாட்சி வழங்கியிருந்தனர்.

Related posts: