தவிசாளர்களுக்கு தொலைபேசி வசதி – உள்ளுராட்சி அமைச்சால் அறிவுறுத்து!

உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்களுக்கும் உப தவிசாளர்களுக்கும் உத்தியோக பூர்வமாக வீட்டுத் தொலைபேசி வசதியை உடன் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் சுற்று நிரூபம் மூலம் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தவிசாளர்களுக்கு வீட்டுத் தொலைபேசி வசதி பெற்றுக் கொடுப்பதற்கான கட்டளைச் சட்டம் 1993 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்கச்சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. இதன் பிரகாரம் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய உத்தியோகபூர்வ வீட்டுத் தொலைபேசி வசதி (சொந்த) பதவிக்காலம் முழுவதுமாகத் தவிசாளருக்கும் துணைத் தவிசாளருக்கும் உடன் வழங்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை - சீனா!
பகிடிவதை தொடரும் வரை மருத்துவபீடம் மூடப்படும் - மருத்துவ பீட பீடாதிபதி!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 613 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தகவ...
|
|