தவறாக வாகனம் செலுத்தியவருக்கு அபராதத்துடன் சாரதிப்பத்திரம் நிறுத்தம்!

Wednesday, October 12th, 2016

கிளிநொச்சிப் பகுதியில் தவறான முறையில் வாகனம் செலுத்தியவருக்கு 5000ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் சாரதியனுமதிப்பத்திரம் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிப் பகுதியில் தவறான முறையில் வாகனம் செலுத்திச்சென்ற மேற்படி நபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த கிளிநொச்சிப் பொலிஸார் குறித்த நபரை நேற்றுமுன்தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதன்போது குறித்த நபருக்கு 5000ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் சாரதியனுமதிப்பத்திரம் ஒரு மாத காலம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Untitled-1 copy

Related posts: