தவணை பரீட்சைகள் அடுத்த மாதம் ஆரம்பம்!

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகள் அடுத்த மாதம் ஆரம்பமாகும் என்று மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகள் ஜீலை மாதம் 18 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவடையும்.
தரம் 6 தொடக்கம் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பரீட்சையே முதலில் ஆரம்பமாகவுள்ளன.
தரம் 9 தொடக்கம் 11 ஆம் வகுப்புக்கான விஞ்ஞான செயன்முறைப் பரீட்சைகள் ஜீலை 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. தரம் 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அழகியல் செயல்முறைப் பரீட்சைகள் ஜீலை 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
அனைத்துப் பரீட்சைகளும் 8 மணிக்கு ஆரம்பமாகும். பாடங்களுக்கு ஏற்ப பரீட்சை நேரங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பொருத்தமானவர்களுக்கே பதவி - ஜனாதிபதி!
பொலிஸ் அதிகாரிகள் 72 பேருக்கு இடமாற்றம்!
மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவ...
|
|