தவணைக் கொடுப்பனவில் கடன் செலுத்துபவர்களுக்கு கடும் நெருக்கடி – வேலைவாய்ப்பின்மையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாமல் கோரிக்கை..!

தவணை கொடுப்பனவில் கடன் செலுத்துபவர்கள் கடும் நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ள நிலையில், வேலைவாய்ப்பின்மையை குறைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுஜன பெரமுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
பெந்தோட்டை பகுதியில் நடைபெற்ற கூட்டத்தின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,
தொழிற்சாலைகள் மூடப்படும்போது தொழில் வாய்ப்புகள் இல்லாமல் போகின்றன. வாரத்துக்கு மூன்று நாள் தொழிற்சாலைகள் மூடப்படும்போது இவ்வாறான நிலையே ஏற்படுகின்றது.
இதன்மூலம் சமூகத்தில் வெவ்வேறான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. இந்த பிரச்சினையில் தலையிட்டு இதனை நிவர்த்திக்குமாறு ஜனாதிபதியிடம் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
சம்பந்தப்பட்டவர்களிடம் இதுதொடர்பில் கலந்துரையாடுமாறு கேட்கின்றோம். இதன்மூலம் தொழில் துறையை பாதுகாக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|