தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் அமுலானது – நாளைமுதல் விஷேட நடைமுறை!

Thursday, April 9th, 2020

அபாயம் மிக்க வலயங்கள் என இனங்காணப்பட்ட கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்து ஏனைய மாவட்டங்களுக்கு இன்று 10 மணி நேரம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 4 மணிமுதல் அமுலாக்கப்பட்டுள்ளதாக  ஜனாதபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட குறித்த 19 மாவட்டங்களுக்கும் இன்று மாலை 4 மணிமுதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்ந்தப்படும் என்றுநம் அதே நாள் மாலை 4 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

இதனிடையே நாடாளவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் வெளியில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்


இதனடிப்படையில் அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் பொது மற்றும் தனியார் துறைகளின் ஊழியர்களுக்கு அவர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையுடன் மேலதிகமாக பணியிடத் தலைவரின் கடிதமும் வைத்திருக்க வேண்டுமென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


இந்த புதிய நடைமுறை நாளைமுதல் நடைமுறைக்கு வரும். இது வைத்தியர்கள் மற்றும் ஊடகத் துறையினருக்கு பொருந்தாது என்றும் அவர் தெரிவித்தார்.


அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் பொது மற்றும் தனியார் துறையின் உறுப்பினர்களுக்கும் அவர்களின் தேசிய அடையாள அட்டையுடன் இந்த சேவை கடிதம் கட்டாயமானது என்று தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஒரு சில தரப்பினர் சட்டத்தையும் மீறி வெளியில் செல்வதால் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

Related posts: