தரிசு நெல் நிலங்களை பயிரிடும் தேசிய நிகழ்வு கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளரால் அங்குரார்ப்பணம்!

தரிசு நெல் நிலங்களை பயிரிடும் தேசிய நிகழ்வின் ஒரு பகுதியாக, கிளிநொச்சி கோவில்வயல் கிராமத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தவைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு குறித்த திட்டத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் பிரகாரம் நாடு முழுவதும் உள்ள 320 கமநல சேவை நிலையங்களை உள்ளடக்கிய தரிசு நெல் நிலங்களை பயிரிடும் தேசிய நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சுமார் 28,000 ஏக்கர் தேர்ந்தெடுக்கப்பட்ட தரிசு நெல் நிலங்களை பயிரிடும் தேசிய நிகழ்வின் ஓர் அங்கமாகவே கிளிநொச்சி கோவில்வயல் கிராமத்திலும் குறித்த நிகழ்வு வை.தவநாதனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|