தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வுகள் நடத்துவதற்கு இன்று நள்ளிரவுமுதல் தடை !
Tuesday, April 30th, 2024
நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வு என்பவற்றை நடத்துவதற்கு இன்று நள்ளிரவுமுதல் தடை விதிக்கப்படவுள்ளது.
குறித்த பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதிமுதல் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அதேநேரம், பரீட்சை தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காட்சிப்படுத்துவது, துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பது உள்ளிட்ட செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது
அவ்வாறு செயற்படும் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, 3,527 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


