தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள் அனைத்துக்கும் ஒக்டோபர் 11 ஆம் திகதி நள்ளிரவுமுதல் தடை – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!
Wednesday, October 4th, 2023
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி சுமார் 2,888 நிலையங்களில் நடைபெறவுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாம் பாகம் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரையும், முதல் பாகம் 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மீண்டும் யாழ்ப்பாணத்தில்இளைஞன் மீது வாள்வெட்டு!
ரணிலுக்காக மக்களை விரட்டி விரட்டி பிடித்த விஜயகலாவும் ஆர்னோல்ட்டும் – அதிர்ப்தியில் உத்தியோகத்தர்கள...
எரிவாயு தட்டுப்பாட்டிற்கு இரண்டு நாட்களில் தீர்வு - எரிவாயு நிறுவனங்கள்!
|
|
|


