கண்ணிவெடிகளை அகற்ற 190 மில்லியன்!

Sunday, September 17th, 2017

வடக்கு பிரதேசத்தில் மனிதாபிமான செயற்பாடுகளுக்காக ஜப்பான் நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானித்துள்ளது இது தொடர்பிலான உடன்படிக்கையொன்று இலங்கைக்கான ஜப்பான் தூதுவருடன் அண்மையில் கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் இடம்பெற்றது

இந்த உடன்படிக்கையின் படி 190 மில்லியன் ரூபாய் ஜப்பானினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

குறித்த உடன்படிக்கையின் மூலம் கிடைக்கும் நிதியின் ஊடாக நிலக் கண்ணிவெடிகளை அகற்றி இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இலங்கையில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக ஜப்பான் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் நிதி ஒதுக்கீடுகளை செய்துவரும் நிலையில், இதுவரையில் 31.3 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியுதவியை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 7 பேர் பலி - நோயால் பீடிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையும் அதிகரிப்ப...
தீவகத்தில் தென்னை மற்றும் கஜு பயிர்ச் செய்கை ஊக்குவிக்கப்பட வேண்டும் - வேலணை பிரதேச சபை உறுப்பினர்...
வெளிநாட்டு தொழில் வெற்றிடத்துக்கு அனுமதியளிக்கும் காலம் 2 மணித்தியாலங்களாக குறைப்பு - இராஜாங்க அமைச...