தரம் ஒன்று அனுமதியில் பழைய மாணவருக்கான சலுகையில் வெட்டு!

Tuesday, May 9th, 2017

பாடசாலைகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் அனுமதியில் இதுவரை காலமும் பழைய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை குறைக்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு முதலாம் ஆண்டுக்கான மாணவர் அனுமதியின் போது இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த சுற்றறிக்கை கல்வி அமைச்சினால் தற்போதைக்கு மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக முதலாம் ஆண்டுக்கான மாணவர் அனுமதியின் போது பாடசாலையின் பழைய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 25 வீத அனுமதியை 20 வீதமாக குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் வதிவிட அடிப்படையில் வழங்கப்படும் அனுமதியை 50 வீதத்திலிருந்து 55 வீதமாக அதிகரிக்கவும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பழைய மாணவர்களின் பிள்ளைகளுக்கான கோட்டா அனுமதியின் போதும் பாடசாலை அமைவிடத்திலிருந்து வதிவிடத்துக்கான தூரத்தின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கி பாடசாலைக்கான அனுமதியைப் பெற்றுக் கொடுக்கவும் குறித்த புதிய சுற்றறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.எனினும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதுவரை குறித்த சுற்றறிக்கைக்கான அனுமதியை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: