தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைக்க தேர்தல் பட்டியல் தகவல்களை கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!
Thursday, June 10th, 2021
2022 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு தேவையான தேர்தல் பட்டியல் தகவல்களை குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் பட்டியல் தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
இதேவேளை 2022 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு தேவையான 2016, 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கான தேர்தல் பட்டியல் தகவல்களை, இவ்வாறு பெற்றுக் கொண்டதன் பின்னர் அவற்றை கிராம உத்தியோகத்தரிடம் அல்லது வேறு அதிகாரிகளிடமோ உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள இரண்டு வங்கிகளுக்கு அனுமதி?
இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது கொரோனா தொற்று : நாளாந்தம் நாடு முழுவதும் 6000 பி.சி.ஆர் பர...
கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் விலகல் - மகஜரை ஒன்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் ...
|
|
|


