தரமற்ற பொலித்தீன்கள் விரைவில் அழிப்பு – மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை!

சுமார் 10 டொன் தரமற்ற பொலித்தீன்களை அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொம்பே பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட பொலித்தீனை அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
மாத்தளை, கம்பஹா மற்றும் பாணந்துறை முதலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது குறித்த தரமற்ற பொலித்தீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இந்தப் பொலித்தீன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
20 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் புதிய வர்த்தமானி - அமைச்சருமான விமல் வீரவன்ச!
எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் தனிமைப்படுத்தப்படுகின்றன கிழக்கு மாகாணத்தின் முக்கிய பகுதிகள் - இராணுவ ...
நயினாதீவு நாகபூஷணி அம்மன் திருவிழா ஆரம்பம்!
|
|