தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!
Sunday, March 20th, 2022
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த வாரம் பாரியளவில் அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் மொத்த விலை, இன்று காலை பாரியளவில் வீழ்ச்சியடைந்து, மரக்கறிகள் விற்பனையாகாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மரக்கறிகள் வாங்க வரும் வியாபாரிகள் வருகை தராததும், எரிபொருள் தட்டுப்பாடுமே மரக்கறிகளின் விலை வீழ்ச்சி மற்றும் விற்பனையின்மைக்கு முக்கிய காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகையான மரக்கறிகள் வந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் ஒவ்வொரு மரக்கறியினதும் மொத்த விலை கிலோகிராமுக்கு ரூ.200ஐ தாண்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானப்படை விமானம் – விமானிகளுக்க பாதிப்பில்லை என விமானப்படை பேச்சாளர் தெரிவ...
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்ப – யாழ். போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விட...
மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை – வடக்கின் அளுநர் அறிவிப்பு!
|
|
|


