தம்பாட்டியில் நள்ளிரவு திருடர்கள் கைவரிசை – ஆலயம் உள்ளிட்ட பல இடங்கள் உடைத்து பெறுமதியான பொருட்கள் திருட்டு!
Friday, June 8th, 2018
ஊர்காவற்றுறை பிரதேசத்தின் தம்பாட்டி பகுதியில் திட்டமிட்ட வகையில் திருட்டுக் கும்பல் ஒன்று மேற்கொண்ட துணிகரக் கொள்ளையில் ஆலயங்கள் கடைகள் மதுபான நிலையங்கள் என பல கட்டடங்கள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பெறுமதி மிக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தெரியவருவதாவது –
நேற்று நள்ளிரவு 11 மணியை கடந்த நிலையில் தம்பாட்டி பகுதியில் மின்சாரம் திடீரென தடைப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியின் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் கடைகள், கள்ளுத்தவரணை உள்ளிட்ட பல இடங்கள் உடைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி மணி ஒலி கருவிகளும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை சம்பவத்தை அவதானித்த பொதுமக்கள் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்து.
Related posts:
|
|
|







