தமிழ் பேசும் பெண் பொலிஸாரை சேர்த்துக் கொள்ள நடவடிக்கை!
Thursday, February 7th, 2019
வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு போதுமானளவு பொலிஸாரை சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வரையிலான பதவிகளில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கையை 15 சதவீதம் வரை அதிகரிப்பதற்கான தீர்மானத்தையும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு எடுத்துள்ளதுடன் ஆண் பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் பெண் பொலிஸ் அதிகாரிகளின் சதவீதம் போதுமானளவு இல்லாமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒட்டு மொத்த பொலிஸ் அதிகாரிகளைக் கணக்கிலெடுக்கும்போது பெண் பொலிஸாரின் எண்ணிக்கையும் பெண் பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகளின்போது பெண் அதிகாரிகளின் தேவை மிகவும் அவசியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பொலிஸ் பரிசோதகர் பதவிகள் 50 மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிபதவிகள் 7 ஆகியவற்றை அதிகரிப்பதற்குதாம் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்திருந்ததாக பொலிஸ் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமையில் தொடர்ந்தும் பெண் பொலிஸாரின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்படுவதைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் விஷேட நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
|
|
|


