தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் எல்லையற்ற இணைய வசதி!
Thursday, April 1st, 2021
தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் எல்லையற்ற இணைய வசதி வழங்கப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் காலை இரவு என்ற மாற்றமின்றி எல்லையற்ற இணைய வசதி பெற்றுக்கு கொள்ள முடியும்.
இதற்கு முன்னர் உரிய தொலைதொடர்பு நிறுவனங்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட யோசனையை கருத்திற் கொள்ளும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தற்போது உள்ள கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட்டாது. எல்லையற்ற பெக்கேஜிற்காக தற்போது உள்ள கட்டங்களுடன் ஒப்பிடும் போது எல்லையற்ற பெக்கேஜ் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.எல்லையற்ற இணைய வசதி வழங்குமாறு வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது
Related posts:
|
|
|


