தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் ஹர்த்தால்!

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று (13) வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா நீதிமன்றில் தமது வழக்குகளை நடாத்துமாறு அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 18 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்த வருகின்றார்கள். மூன்று அரசியல் கைதிகளினதும் கோரிக்கைகளை அரசாங்கம் உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் அரசியல் தீர்மானமெடுத்து உடனடியாக விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
Related posts:
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழப்பு: ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விளக்கமறியல் நீடிப...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் கைது!
அரச நிறுவனங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் வகையில் வழிகாட்டுதல்களை...
|
|