தமிழினம் தோற்றுப்போன அவலங்களை சுமக்கின்ற இனமாக தவிக்க விடப்பட்டுள்ளது – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி!
 Friday, July 24th, 2020
        
                    Friday, July 24th, 2020
            
தவறான அரசியல் தலைமைகளின் தவறான வழிகாட்டுதல் காரணமாக தமிழினம் தோற்றுப்போன அவலங்களை சுமக்கின்ற இனமாக தவிக்க விடப்பட்டுள்ளது என்று யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, கோணாவில் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாற தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துக் கூறுகையில் – தமிழ் மக்களுக்கு இன்றுவரை தீர்வு கிடைக்காமைக்கு காரணம் இதர தமிழ் தலைமைகள் தமது சுயநலத்துக்காக மேற்கொள்ளும் அரசியல் போக்குத்தான் என சுட்டி;காட்டியதுடன் ஏற்பட்ட அனைத்து அவலங்களில் இருந்தும் எமது இனத்தை மீட்டெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். அது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        