தமிழக மீனவர்களை கைது செய்யாதீர் – இலங்கையிடம் உலக கடற்றொழிலாளர் பேரவை வேண்டுகை!
Saturday, May 14th, 2016
இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று உலக கடற்றொழிலாளர் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பேரவையின் கூட்டம் அண்மையில் பாங்ஹொக்கில் இடம்பெற்றது. இதில் பல நாடுகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதன்போது இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றமை குறித்த முறைப்பாடு தமிழக பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் பேரவைக் கூட்டத்தில் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் அத்துமீறி மீன்பிடி என்று கூறி தமிழக கடற்றொழிலாளர்களை அடிக்கடி கைது செய்வதை இலங்கை கடற்படையினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது
தமிழகத்தின் அப்பாவி கடற்றொழிலாளர்களை கைது செய்வதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதையும் பேரவை தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே இலங்கை அரசாங்கம் தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்யாது பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர வேண்டும் என்றும் பேரவையின் அறிக்கையில் கேட்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


