தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பம் – தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவிப்பு!

ஒரு மாத காலமாக கொழும்பு மத்திய தபாலகத்தில் தேங்கிக் கிடந்த தபால்களை பரிமாற்றும் உள்ளக நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன..
இதன்பொருட்டு மத்திய மற்றும் பிராந்திய தபால் பரிமாற்றகத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தபால் திணைக்களத்தில் குவிந்து கிடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ஊழியர்களை பயன்படுத்தி, கடிதங்களை வகைபிரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன. கடிதங்கள் வகைபிரிக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட தபால் நிலையங்களுக்கு அவை அனுப்பிவைக்கப்படவுள்ளன.
மருந்துப் பொருட்களை வீட்டிற்கே விநியோகிக்கும் செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
எதிர்வரும் காலங்களில் கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் - இராணுவ தளபதி எச்சரிக்கை!
யுக்ரைனில் உள்ள இலங்கையர்கள் குறித்து அவதானம் - வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வந்ததாகவும் அறிவிப்பு!
|
|