தபால் ஊழியர் வேலை நிறுதத்தால் இலட்சம் பொதிகள் தேக்கம்!

Wednesday, December 21st, 2016

தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தால் மக்கள் பாரிய அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புது வருடப்பிறப்பை முன்னிட்டு மக்கள் பெருந்தொகையான வாழ்த்து மடல்களையும், தபால் பொதிகளையும் அனுப்பி வைத்துள்ள நிலையில் தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதிகள் யாவும் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் தேங்கிக் கிடக்கின்றன.

இதேவேளை தமது 48 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நுாறு வீதம் வெற்றியளித்திருப்பதாகவும் சுமார் 15 இலட்சம் தபால் பொதிகள் நாடு முழுவதும் தேங்கிக் கிடப்பதாகவும் வேலை நிறுத்தத்தில் களமிறங்கியுள்ள

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்ணனியின் இணை அழைப்பாளரான சிந்தக்க பண்டார தினகரனுக்குத் தெரிவித்தார். அத்துடன் தமது போராட்டத்துக்கு காரணமான 07 அம்சக் கோரிக்ைககள் அடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக தபால் திணைக்கள ஊழியர்கள் தபால் திணைக்களத்தின் தலைமையகத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி இன்று(21) காலை 10 மணிக்கு ஊர்வலமாக செல்லவிருப்பதாகவும் சிந்தக்க பண்டார தெரிவித்தார்.

ஏழு அம்ச கோரிக்ைககளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள் 48 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த 19 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த பணிபகிஷ்கரிப்பு ஆரம்பமானது.

தபால் திணைக்களத்துக்கு ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட 07 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்தே ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்ணனி வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இன்று(21) நள்ளிரவுடன் தபால் திணைக்கள ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தொழிற்சங்கப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.எ ஹலீம் நேற்றுக் காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தினார். இதன்போது தொழிற்சங்கப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நியமிப்பதுடன் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்துவதற்கும் பிரதமர் வாக்குறுதி அளித்திருப்பதனால் வேலைநிறுத்தத்தை கைவிட்டு இன்று அனைவரையும் வேலைக்கு சமூகம் அளிக்கும்படி அமைச்சர் தொழிற்சங்கப்பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும் அடையாள வேலை நிறுத்தம் இன்று நள்ளிரவு வரை தொடருமென்பதில் தொழிற்சங்கம் உறுதியாக இருப்பதாக சிந்தக்க கூறினார். அத்துடன் தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுத் தருவதற்காக நாளை முதல்14 நாட்கள் காலஅவகாசம் வழங்குவதாகவும் அதற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தில் களமிறங்க நேரிடும் என்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்

post-1

Related posts: