தபால் ஊழியர்கள் நண்பகல் முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்!
Thursday, December 28th, 2017
தபால் தொழிற்சங்க முன்னணியானது இன்று(27) நண்பகல் தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தபால் திணைக்களத்துக்கு புதியவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் கொள்கை ஒன்றை வகுப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்ந்தும் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டின் சகல மாவட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு பிரதான நகரங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
Related posts:
தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை இன்று அறிமுகப்படுத்தி வைத்தார் அமைச்சர் நாமல் ராஜபக்ச!
காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பியுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு சுற்றாடல் ...
|
|
|


