தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதியில் மீண்டும் மாற்றம் – வரையறுக்கப்பட்ட மாணவருடன் சமூக இடைவெளியைப் பேணி வகுப்புக்களை நடத்த அனுமதி!

தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து கட்டுப்பாடுகளுடனும் இம்மாதம் 29ஆம் திகதி தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்பதாக தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில் எதிர்வரும் 15ஆம் திகதிமுதல் தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தனியார் வகுப்பின் இட வசதிக்கு ஏற்பட்ட சமூக இடைவெளியைப் பேணி வகுப்புக்களை நடத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 100 மாணவ மாணவியரே கல்வி கற்க முடியும் எனவும் வரையறை விதிக்கப்பட்டுள்ளது.
போதியளவு இட வசதி இல்லாத தனியார் வகுப்புக்களில் முன்னதாக வகுப்புக்களில் கலந்து கொண்ட மாணவ மாணவியரின் எண்ணிக்கையில் அரைவாசி மாணவ மாணவியர் பங்கேற்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|