தனியார் மருத்துவ சேவை சிலவற்றுக்கு வரி விலக்கு!
Thursday, June 21st, 2018
தனியார் மருத்துவமனைகளில் சிலவற்றுக்காக அறவிடப்படுகின்ற வற் வரி நீக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது:
மருத்துவரின் கட்டணம், வைத்திய ஆலோசனை கட்டணம் மற்றும் சேவைக் கட்டணம் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரி எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீக்கப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.
வெளிநோயாளர் பிரிவுக்கு அறவிடப்படுகின்ற வற் வரி ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளது. ஆயினும் தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும்போது அறவிடப்படுகின்ற அறைக்கட்டணம் மீதான வற் வரி தொடர்ந்து அறவிடப்படும் என்றார்.
Related posts:
பருத்தித்துறை கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லை - அச்சத்தில் மீனவர்கள்!
பெடீ வீரகோன் காலமானார்!
தொழில் நிமித்தம் யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொரோனா அறிகுறி - யாழ் போதனா வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி!
|
|
|


