தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை – அமைச்சர் மகிந்த அமரவீர!
Thursday, April 9th, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானத்தை இழந்துள்ள தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவியை தொகையை வழங்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நிரந்தர வருமானம் இல்லாத நபர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகையை தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அந்த கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி சாதமான பதிலை வழங்கியதாகவும் அமைச்சர் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பரிதாபப் பலி - அதிர்ச்சிக் காரணம் வெளியானது!
உரிய நேரத்தில் ஒட்சிசனை வழங்கியமைக்காக இந்தியாவுக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்த இலங்கை!
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு - உலகில் சுற்றுலாவுக்கு பொருத்தமான 5 நாடுகளில் இலங்கையும் உள்...
|
|
|


