இன்று உலக இருதய தினம்!

Sunday, September 24th, 2017

இன்று உலக இருதய தினம் .ஒவ்வொரு வருடமும் செப்ரெம்பர் மாத இறுதி வாரத்தில் குறித்த தினம்  அனுஸ்டிக்கப்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் தொற்றா நோய்கள் மத்தியில் இருதய நோய் முக்கிய இடத்தைப் பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருதய நோய் காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 600 ஆகும். இருதய நோயினால் இறப்போரின் எண்ணிக்கை 150ற்கும் அதிகமாகும். இதில் மூன்றில் ஒரு பிரிவினர் பெண்களாவர்.

இருதய நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அரசாங்கம் வருடாந்தம் செலவிடும் தொகை 350 கோடி ரூபாவாகும்.

இருதய நோய் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் புகைத்தல் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புகைத்தலைப் போன்று அதனுடன் தொடர்புபட்ட புகைப்பாவனை இதற்குக் காரணமாகும். அதிக கொழுப்பு, உப்பு மற்றும் மாவுடனான உணவு வகைகளை பயன்படுத்துதல், உடற்பயிற்சியை மேற்கொள்ளாமை, இருதய நோய் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக அமைகின்றன.

நாளாந்தம் உடற்பயிற்சியை மேற்கொள்ளல், மரக்கறி மற்றும் பழவகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இருதய நோயைத் தடுப்பதற்கு முடியம் என்று விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதே வேளை 2020 ஆம் ஆண்டு உலக அளவில் இருதய நோயால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மரபணு ரீதியாக ஏற்பட்டு வந்த இருதய நோய் இப்போது நாம் கையாளும் பழக்க வழக்கங்களால் வாழ்க்கை முறைப்படியான நோயாக மாறியுள்ளது. இதய நோயிலிருந்து தப்பிக்க ஐந்து வழிமுறைகள்

தொலைக்காட்சி பார்ப்பதை குறைக்க வேண்டும்; நாளொன்றுக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சியை பார்ப்பவர்களுக்கு 125 சதவீதம் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. புகையை தவிர்க்கவும்  புகை பழக்கம் இதயத்தின் தமனிகளை பாதித்து குறுகலாக செய்கிறது. புகை இலையில் உள்ள கார்பன் மோனாக்சைடு இரத்தத்தில் ஒக்சிஜன் அளவை குறைக்கிறது. இதனால் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்படும், இவை நாளடைவில் பெரிய பாதிப்பை கொண்டுவரும். மேலும் புகை பிடிப்பவரின் அருகில் இருப்பதையும் தவிர்பது அவசியம்.

நல்ல தூக்கம்; தூக்கமின்மை என்பது மனதளவிலும் உடலளவிலும் உபாதைகளை கொண்டு வரும். மேலும் இருதய தமனிகளில் கல்சியம் அளவை அதிகரிக்க செய்யும். இதனால் பிளேக், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும்.

உடற்பயிற்சி அவசியம்; ஒவ்வொரு நாளும் ஒரு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்து வந்தாலே இருதய நோய் வருவதிலிருந்து 60 சதவீதம் தப்பிக்க முடியும்.

Related posts: