தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் நாட்டுக்கு பயனுள்ள தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் – ஜனாதிபதி!

சைட்டம் மருத்துவக் கல்லூரி உட்பட தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சகல தரப்புக்களுடனும் கலந்துரையாடி நாட்டுக்கு வினைத்திறன் மிக்க தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை மாணவர் சமூகத்தின் கருத்துக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மாலபே சைட்டம் கல்லூரியை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ள நெருக்கடிகள் பற்றி கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி இக்கருத்தை வெளியிட்டார்.
சைட்டம் கல்லூரியில் கற்கும் மாணவர்களின் பெற்றோரும், டொக்டர் நெவில் பெர்னாண்டோ தலைமையிலான குழுவினரும் இதில் கலந்து கொண்டார்கள்.அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், பல் மருத்துவ அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் என்பனவற்றின் மூலம் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடனும் இதுபற்றி கலந்துரையாடப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
Related posts:
|
|