தனியார் நிறுவன உரிமையாளர்களின் கோரிக்கையை நிராகரித்தது கைத்தொழில் அமைச்சு!

Monday, September 14th, 2020

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தின் அரை பங்கினையோ அல்லது 14,500 ரூபாவையோ இம்மாதம் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை கட்டயாம் வழங்க வேண்டும் என அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.

எனினும் வரையறுக்கப்பட்ட சம்பளத்தை தொடர்ந்து வழங்க அனுமதி தர வேண்டும் என தனியார் நிறுவன உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனோலும் கொரோனா வரைஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தொழிற்துறைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்துள்ளன. ஆகையால் நிறுவன உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என தொழிற்துறை அமைச்சு நிராகரித்துள்ளது.

கொரோனா வரைஸ் தாக்கத்தினால் தொழிற்சாலைகள் தொழிற்துறை ரீதியில் பாதிக்கப்பட்டன. இதனால் தனியார் ஊழியர்கள் தொழில்வாய்ப்புக்களை இழக்க நேரிட்டது.

நிறுவனங்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் அரசாங்கம் பல தீர்மானங்களை முன்னெடுத்தது. ஊழியர்களுக்கு அவர்களின் மாத சம்பளத்தின் அரைவாசியையோ அல்லது 14500 ரூபாவையோ இம்மாதம் வரை வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

இந் நிலையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளத்தின் அரைவாசி அல்லது 14, 500 ரூபாவை வரையறுக்கப்பட்ட விதத்தில் வழங்குவதை தொடர்ந்து நீடிக்க அனுமதி அரசாங்கம் அனுமதி தர வேண்டும் என நிறுவன உரிமையார்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை தொழிற்துறை அமைச்சு நிராகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் விவகாரத்தை காரணம் காட்டி ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் காலை, உணவினையும், போக்குவரத்து வசதிகளையும் இரத்து செய்துள்ளன. ஊழியர்கள் தங்களின் சொந்த செலவில் இத் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கிறார்கள்.

தனியார் தொழிற்துறையினருக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவுகள் உள்ளிட்ட இதர கொடுப்பனவுகள் இனி முறையாக எவ்வித அறவீடுகளுமின்றி வழங்கப்பட வேண்டும் எனவும் தொழிற்துறை அமைச்சு நிறுவன உரிமையாளர்களிடம் வலியுறுத்தியுள்ளது.

கைத்தொழில் துறையினை வலுப்படுத்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் பல சலுகைகள், வரிகுறைப்பு ஆகியவற்றை வழங்கியுள்ளது. ஆகவே முதலாளிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஏற்க முடியாது என கைத்தொழில் அமைச்சு நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: