தனியார் நிறுவனங்களில் இரத்தப் பரிசோதனை செய்ய தடை!
Sunday, July 31st, 2016
அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுப்புவது முழுமையாக தடைசெய்யப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து இந்தத் தடை அமுல்படுத்தப்படும். குறித்த தினத்திலிருந்து சகல அரச வைத்தியசாலைகளிலும் இரத்தப் பரிசோதனை செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய சகல அரச வைத்தியசாலைகளுக்கும் இரத்தம் பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.
Related posts:
மீண்டும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் திறப்பு!
தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 20 மெகாவோட் பற்றாக்குறை - 2 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக...
பெற்றுக்கொண்ட கடனை குறுகிய காலத்துக்குள் மீளச் செலுத்திவிடும் என எதிர்பார்க்கவில்லை - இலங்கை பொருளாத...
|
|
|


