தனியார் துறையில் மட்டும் 4 இலட்சம் வெற்றிடங்கள் – தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம்!

Saturday, January 20th, 2018

நாட்டின் தொழில் துறையின் தேவைகளுக்கு அமைய பல்கலைக்கழக பாட நெறிகளை அறிமுகப்படுத்துவதற்கும் வேலைவாய்ப்புக்களை அடையாளம் கான்பதற்கும் வாய்ப்பு எற்பட்டுள்ளதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் முதலாக நடத்தப்பட்ட தொழில் கேள்வி தொடர்பான கணக்கெடுப்பில் தனியார்த்துறையில் மட்டும் சுமார் 4லட்சத்திற்கு மேற்பட்ட வெற்றிடங்கள் இருக்கின்றன என புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த ஆண்டு இறுதியில் நடத்திய நாடு தழுவிய ரீதியிலான கணக்கெடுபில் இந்த விபரங்கள் தெளிவாகியுள்ளன  இக் கணக்கெடுப்பில் இந்த விபரங்கள் பதிவாகியுள்ளன

இக் கணக்கெடுப்பின் போது 3500தனியார் நிறுவனங்களிடமிருந்து தகவல் திரட்டப்படடதாகவும் அதில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 302 பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன எனவும் கண்டறியப்பட்டுள்ளது.  தற்போது தனியார் துறையில் சகல தரங்களிலும் ஏறத்தாழ  50 லட்சம் ஊழியர்கள் பணியாற்றகின்றனர் பல்வேறு துறைகளில் 5 லட்சம் வெற்றிடங்கள் நிலவுகின்றன என்கின்றன  அந்தப்புள்ளிவிவரஙகள்

அதிக எண்ணிக்கையில் வெற்றிடங்கள் தையலுடன் தொடர்பான துறையிலும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் துறையிலும் காணப்படுகின்றன

இவற்றை தவிர இயந்திர பொறியியலாளர், கணக்கியல், தொழில்நுட்பவியலாளர், தொடர்பான உயர்தொழில் துறைகளிலும் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்பது  கணக்கெடுப்பின் போது தெரியவந்துள்ளது.

Related posts: