தனியார்துறை ஊழியர்களது ஊதியங்கள் தடையின்றி வழங்கப்பட வேண்டும் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்து!

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டாலோ கட்டாயம் அவர்களுக்கான ஊதியத்தை உரிய நிறுவனங்கள் வழங்க வேண்டுமென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனியார்த்துறையில் பணிபுரியும் 35 இலட்சம் ஊழியர்கள் மாத்திரமல்ல அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் உட்பட ஏனைய நிறுவனங்களில் ஓய்வூதியம், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிக்கு உரித்தானவர்கள் அனைவருக்கும் கட்டாயம் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று காரணமான பணிக்கு வருகைத்தர முடியாது போனவர்களுக்கு அரைவாசி சம்பளத்தை வழங்குவது தொடர்பில் முதலாளிமார் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கொரோனா தொற்றுக் காரணமாக தனியார் நிறுவனங்கள் பல வாரங்கள் மூடப்பட்டாலும் ஊழியர்களுக்கு கட்டாயம் சம்பளத்தை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிரந்த அமைச்சர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நட்டமீட்டும் நிறுவனங்களாக தரவுகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் மாத்திரம் குறைந்தபட்டச தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 14 ஆயிரத்து 500 ரூபாவை வழங்க முடியும் என்றும் சம்பளத்தை செலுத்தாதுள்ள நிறுவனங்கள் தொழில் தொடர்பில் தொழில் அமைச்சுக்கு தெரியப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|