தனியாருக்கும் 2500 ரூபாய் வேதனம் அதிகரிக்க யோசனை!
Tuesday, March 19th, 2019
அரசாங்க ஊழியர்களைப் போல தனியார் பிரிவு சேவையாளர்களுக்கான வேதனமும் 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற யோசனை நேற்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தொழிலமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகேவினால் இந்த யோசனை சமர்பிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் தொழிற்சங்க உறவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதம் நேற்று இடம்பெற்றது.
இதேவேளை, கண்டி அபிவிருத்தி, எண்மான உட்கட்டமைப்பு வசதிகள் தகவல் தொழில்நுட்பம் என்பன தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.
Related posts:
தொடரும் கனமழையால் வடக்கின் அநேக மாவட்டங்களில் பெரும்போக நெற் செய்கை பெரிதும் பாதிப்பு என விவசாயிகள் ...
எரிபொருள் விலை அதிகரிக்கவில்லை - வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை - வலுசக்தி அமைச்சர் கஞ்சன வ...
யாழ்ப்பாணப் பல்கலையில் வடக்கு மாகாண நீர்வளப் பாதுகாப்பு ஆய்வரங்கு!
|
|
|


