தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 61 ஆயிரத்து 587 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!
Monday, August 30th, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 61 ஆயிரத்து 587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில், மேல் மாகாணத்திற்கு நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் 13 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் நுழையும் பகுதிகளில், 805 வாகனங்களில் பயணித்த ஆயிரத்து 792 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
ஊழியர் சேமலாப நிதிய பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விஷேட அறிவித்தல்!
அரச பேருந்தில் பயணிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்றினால் இழப்பீடாக 10,000 உயிரிழந்தால் 50,000 - பற்றுச...
காலத்துக்கு காலம் தேசிய திட்டங்களில் ஏற்படும் மாற்றம் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருக்கின்றது -...
|
|
|


