தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 718 பேர் கைது – 13 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார் அறிவிப்பு!
Sunday, August 29th, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 718 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 13 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 61 ஆயிரத்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றுமு; பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் மேல் மாகாணத்துக்குள் பிரவேசித்த 2 ஆயிழரத்து 82 வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.
அத்துடன், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய ஆயிரத்து 258 வாகனங்கள் சோதனையிடப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திடீரென மயங்கி வீழ்ந்தவர் சாவு - 4 நாள்களில் 4 ஆவது சம்பவம்!
200 மில்லியன் யுவான் பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியை இலங்கைக்கு வழங்குகிறது சீனா - வெளிவிவகார அம...
நாளைமுதல் காலாவதியாகவுள்ள இலங்கை கடவுச்சீட்டுகளுக்கு ஒருவருடகால சலுகை - குடிவரவு மற்றும் குடியகல்வு ...
|
|
|


