தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய 66 ஆயிரத்து பேர் இதுவரை கைது!
Monday, September 6th, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதன்போது 53 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 66 ஆயிரத்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் நாடு பூராகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
விரைவில் கிரிக்கெட் தேர்தல் : சட்டமா அதிபர் திணைக்களம்!
இலங்கை மின்சார சபைக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
வாக்களிப்புக் கால நீடிப்பு உள்ளிட்ட பல்வேறு இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும் என அறிவிப்பு!
|
|
|


