தனிமைப்படுத்தலில் இருந்து சில பிரதேசங்கள் நாளை விடுவிப்பு – இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா அறிவிப்பு!

தனிமைப்படுத்தலில் இருந்து நாளையதினம் அதிகாலை 5 மணியுடன் சில இடங்கள் விடுவிக்கப்பதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் வனாத்துமுல்லை கிராமசேவகர் பிரிவைத் தவிர்ந்த பொரளை பகுதி, வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்டை, வாக்கந்தையைத் தவிர்ந்த கொம்பனித்தெரு பகுதி என்பன விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, கம்பஹா மாவட்டத்தில் கடவத்தை மற்றும் ஜா-எல ஆகிய இடங்களும் நாளை காலை 5 மணியுடன் விடுவிக்கப்படும் என இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.
அதேநேரம் பமுனுமுல்ல, போகஹாவத்தை, கிரிமந்துடுவ, ஹொரவலை, அட்டாலுகம மேற்கு, பண்டாரகம பிரதேசத்தில் கலகஹமந்திய கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை - அதிகார சபை!
நிறைபோதையில் ஓட்டுனர் - வேலணையில் 18 வயது இளைஞன் பலி..!
விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த நாட்டின் சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் - ஜனாதிப...
|
|