தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான நடமாடும் வாக்களிப்பு வேலைத்திட்டம் இடம்பெறாது – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு!
Monday, July 27th, 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிப்பதற்காக ஜுலை மாதம் 30 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் வேலைத்திட்டம் மேற்கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் காரணமாக இதனை திட்டமிட்ட வகையில் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசியல் கட்சி செயலாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை வரும் வெளிநாட்டுத் தலைவர்கள்!
நாளை பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்றம் கூடும்!
டீசல் வழங்கலில் தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை - தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை!
|
|
|


