தத்துக் கொடுக்கப்பட்டவர்களின் உண்மையான பெற்றோரை அறியும் வேலைத்திட்டம் அரம்பம் !

ஐரோப்பிய நாடுகளுக்கு பல வருடங்களுக்கு முன்னர் தத்துக் கொடுக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சிறார்களின் உண்மையான பெற்றோரை கண்டறியும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சர், இதுதொடர்பில் நெதர்லாந்தின் தொலைகாட்சி ஒன்றுக்கு தகவல் வழங்கி இருப்பதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் 4 ஆயிரம் சிறார்கள் வரையில் இலங்கையில் இருந்து நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு தத்துக் கொடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தங்களின் உண்மையான பெற்றோரை அறிந்துக் கொள்ள வேண்டியத் தேவையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நெதர்லாந்து தூதரகத்தின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Related posts:
சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் ஊக்குவிப்பு ஆசிய அபிவிருத்தி வங்கி 75 மில்லியன் டொலர் கடன்
இரண்டாம் கட்டமாக வேறு தடுப்பூசிகளை வழங்க முடியாது - தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மக்கள் அச்சப்படத்தேவையி...
அமைச்சர் டக்ளஸ் தேவைகளை நிறைவுசெய்து தருவார் - யாழ் போதனாவில் வெளிநோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வர...
|
|