சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் ஊக்குவிப்பு ஆசிய அபிவிருத்தி வங்கி 75 மில்லியன் டொலர் கடன்

Tuesday, February 20th, 2018

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சிகளுக்கான கடனாக மேலும் 75 மில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது பற்றி அமைச்சின் வெளிநாட்டு நிதி வளங்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கி 2016 ஆம் ஆண்டில் ஆரம்பித்துள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக மேலும் 75 மில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 16 ஆம் திகதி ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கி 2016 ஆம் ஆண்டில் ஆரம்பித்திருந்த தொழில் முயற்சி கடன் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக 100 மில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்கியிருந்தது. அந்தக் கடன் வழங்கல்கள் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகளில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக மேலும் 75 மில்லியனை வட மாகாண ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் தலைமையகத்தில் கடந்த 16 ஆம் திகதி நடந்த இந்த கடனுக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் சிறி விடோவரி மற்றும் இலங்கை அரசின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோர் பங்குபற்றி ஒப்பந்தமிட்டனர்.

Related posts: