தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் – துறைசார் அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்பு!
Thursday, February 16th, 2023
மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும், மத ஸ்தலங்கள், அரச மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சூரிய ஒளி கூரை அமைப்புகளை வழங்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை மின்சார சபை முன்வைத்த புதிய மின் கட்டண அதிகரிப்பு குறித்த யோசனைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் எதிர்த்தாலும், ஏனையோர் அனுமதி வழங்கியுள்ள நிலையில் இது நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் மின்சார கட்டணம் நேற்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் 66% அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரபல பாடகர் காலமானார்!
மேலும் பலர் சமுர்த்திப் பயனாளிகளாக இணைவதற்கு வாய்ப்பு!
யால தேசிய பூங்கா மூடப்பட்டது!
|
|
|


